• Jan 19 2025

விசித்ராவைப் போன்று நள்ளிரவில் கொடுமை அனுபவித்த மற்றுமொரு நடிகை- முக்கிய பிரபலம் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை விசித்ரா.இவர் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 இல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.இதில் இவர் தைரியமாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் அண்மையில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில், தன்னை தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கண்ணீர் மல்க பேசி இருந்தார்.இந்த விவகாரம் தான் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்து ரசிகர்கள் பலரும் விவாதித்து வரும் நிலையில் பிரபல பத்திரிகையாளரும் விமர்சித்துள்ளார்.


வலைப்பேச்சு அந்தணன் தான் அதைப் பற்றி கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது,நடிகை விசித்ராவிற்கு ஏற்பட்ட நிலமை இன்னும் பல நடிகைகளுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நேரத்தில் எனக்கு தெரிந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். இதில் அந்த நடிகை யார்... பெயர் எதுவும் நான் சொல்லப்போவதில்லை ஏன் என்றால் அவர் இப்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படத்தில் நடித்த அந்த நடிகை கதாநாயகியாக மாற வேண்டும் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், பத்திரிக்கையாளர் என்ற முறையில், தெலுங்கில் பெரிய நடிகருக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு வந்து இருக்கு என்று கூறி விட்டு, அந்த நடிகை தனது அம்மாவுடன் ஆந்திரா சென்றார்.


அப்போது அந்த பெரிய ஹீரோவை பார்த்துவிட்டு ஓட்டல் ரூமில் இருந்த போது, அந்த நடிகர் இரவு 11மணி அளவில், கதவை தட்டி திடீரென உள்ளே வந்துள்ளார். இதைப்பார்த்து பயந்து போன நடிகையும் அவரின் அம்மாவும், அந்த நடிகரின் காலை பிடித்து கதறி அழுது, வேண்டாம் சார்.. எங்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்று அழுதுள்ளனர். 

 இதைப்பார்த்து டென்ஷனான அந்த நடிகர், இப்போவே இந்த இடத்தை விட்டு ஓடிடுங்க. காலையில உங்களை நான் பார்க்கக்கூடாது என்று கூறியதை அடுத்து. அந்த நடிகையும் அம்மாவும் நள்ளிரவே அந்த ஓட்டலை காலி செய்துவிட்டு அங்கிருந்து கிளப்பி வந்த அந்த நடிகை சினிமாவே வேண்டாம் என்று சென்றுவிட்டதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement