• May 19 2024

நடிகர் சிபி ராஜுடன் ஜோடி சேரும் ஆண்ட்ரியா-புதிய படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் நடிகர் சிபிராஜ். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கான ஓர் அடையாளத்தை அவர் இன்னும் பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் தற்பொழுது ‘மதுபானக்கடை’ என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் சிபி ராஜுடன் ஆண்ட்ரியா, அதுல்யா ரவி மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு வட்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் SR பிரபு தயாரிப்பில் சமீபத்தில் ‘டாணாக்காரன்’ மற்றும் o2 ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கவனம் பெற்றன. அந்தவகையில் ‘வட்டம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement