• May 18 2024

அந்த வார்த்தையை கூறி சர்ச்சையில் சிக்கிய ஜனனி-பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த பூகம்பம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கின்றது.

எந்த சீசனிலும் இல்லாதவாறு இந்த சீசனில் மட்டும் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் இலங்கைப் பெண் ஜனனி சொன்ன அந்த வார்த்தை பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.அதாவது ஒரே வயசில் இருந்து வருவதற்கு இது ஒன்றும் ரீல்ஸ் கிடையாது என தனலட்சுமியை Swap பண்ணும் போது கூறி இருந்தார்.



அந்த வார்த்தை தப்பு என  தனலட்சுமி மற்ற போட்டியாளர்களிடம் கூறி தனக்கான கருத்தை முன்வைக்கின்றார்.அந்த வார்த்தை எதற்காக வரவேண்டும் என கூறுகின்றார்.இதைக் கேட்ட மற்ற போட்டியாளர்களும் அது தப்புத் தான் எனக் கூற உங்களுக்கு விளங்கவில்லை அந்த வார்த்தைக்கு இது அர்த்தம் கிடையாது எனக் கூறுகின்றார்.

இந்த பிரச்சனைக்கும் சம்மந்தப்பட்ட ஜி.பி.முத்து தனக்கும் இதுக்கும் சம்மந்தமே கிடையாது போல வடிவேலுவின் ஜோக்கைக் கூறி படுத்துகிடக்கின்றார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement