• Jan 19 2025

விஜய் டிவி பிரபலத்திற்கு ''ஐ லவ் யூ'' சொன்ன Amy Jackson! அட கதை இப்படி போகுதா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

லண்டனைச் சேர்ந்த ஆங்கில நடிகை தான் எமி ஜாக்சன். இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தங்கமகன், தெறி, எந்திரன் 2.0 ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் 2019 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.  


இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  கடந்த ஆண்டு காதலை விட்டு பிரிவதாக தடாலடி பதிவை வெளியிட்டு இருந்தார் எமி ஜாக்சன். இதன் பின்னர் சில மாதங்களிலேயே  நடிகர்  எட் வெஸ்ட்விக்கை  காதலித்து வருகிறார்.


இந்த நிலையில், நடிகை Amy Jackson உடன் KPY பாலா பேசிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

அதில், தனக்கு ஐ லவ் யூ சொல்ல சொல்ல, Amy Jackson உம் சொல்லுகிறார். மேலும் சில தமிழ் சொற்களை சொல்ல, அவரும் அழகாக சொல்லுகிறார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement