• Jan 19 2025

விஜயாவுக்கு செக்மேட் வைத்த நாச்சியார் பாட்டி! ஸ்ருதிக்கு நடந்த விபரீதம்! ஏக்கத்தில் தவித்த மீனா?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், மீனா காரில் வரும்போது நாற்று நடுவதையும் கொக்கு பறப்பதையும் பார்த்து ஆச்சரியமாக பேசி வர விஜயா கடுப்பாகி, கொஞ்சம் அமைதியா வா.. தலை வலிக்குது என கத்துகிறார். அதற்கு அண்ணாமலை, இதெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு உனக்கு எப்படி தலை வலிக்குது என மூக்கை உடைக்கிறார். 

இன்னொரு பக்கம் ஸ்ருதி, என்ன இந்த ஊரு இப்படி இருக்கு.. எனக்கு ஏதும் ஒழுங்கா இல்லாட்டி நான் ரெஸ்டாரெண்ட் போய் தங்கிடுவன் என சொல்ல, இன்னும் பாட்டி வீட்டுக்கே போகல அதுக்குள்ள இப்படியா என ரவி சொல்லுகிறார்.


மேலும், ரோகினி நம்ம ஊரு காரங்க பாத்துட்டா என்ன ஆகிறது என பதற்றத்துடன் வர மனோஜ் என்னாச்சு என்று கேட்க, ஒன்றும் இல்ல என சொல்லி சமாளித்து விடுகிறார். 

இறுதியாக எல்லோரும் வீட்டுக்கு வந்து இறங்க நாச்சியார் பாட்டி ரொம்ப  சந்தோஷப்படுகிறார். ஊர்க்காரர் வந்து முத்து மீனாவை நலம் விசாரித்து, அவரை புகழ்ந்து பேச,  அதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் கடுப்பாகின்றனர். 


விஜயா ரோகினியை கூப்பிட்டு உங்க மாமா எப்ப வருவாரு அவர் டீ குடிப்பாரா? சைவமா அசைவமா? என கேள்வி மேல் கேள்வி கேட்க முதல்ல அவர் வரட்டும் என விஜயாவுக்கு ரோகிணி சொல்லுகிறார்.

விஜயா மீனாவை கூப்பிட்டு ரோகிணிக்கு, ஸ்ருதிக்கு பிடித்தவற்றை பண்ணுமாறு சொல்ல, இது எல்லாம் பார்த்த நாச்சியார் விஜயாவுக்கு செக்மேட் வைக்க பிளான் போடுகிறார். 

அது என்ன மீனா தான் சமைக்கணுமா? என்று கேட்க, மீனா தான்எங்க  வீட்டிலயும் எல்லா வேலையும் செய்வா என்று விஜயா சொல்கிறார். அவளும் என் மருமகள் தானே நான் சொல்றத செய்ய போறா என சொல்கிறார். 


உடனே நாச்சியார் பாட்டி அதுவும் சரிதான் அவ உன் மருமக நீ சொல்றத செய்வா இப்போ எனக்கு நீதான் மருமக அப்ப நீ தானே எல்லா வேலையும் செய்யணும் என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். என்னது நான் சமைக்கணுமா என்று கேட்க நாச்சியார் பாட்டி ஆமா நீ தான் சமைக்கணும் கூட ரோகிணியும் ஸ்ருதியும் உதவிக்கு வச்சுக்க என சொல்ல அவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். 

நாச்சியார் பாட்டி இருவரையும் கூப்பிட்டு வேலை செய்ய சொல்ல, விஜயா, ரோகிணி, ஸ்ருதி மூவரும் வேறு வழியின்றி சமைக்க செல்ல, அதில் மரக்கறி வெட்டும் போது ஸ்ருதி கையை வெட்டிக் கொண்டு கலாட்டா பண்ணுகிறார். என்ன ஹாஸ்பிடல் கூட்டி போங்க என கத்த, பாட்டி வந்து இது எல்லாம் சமையல் பண்ணும் போது சாதாரணம் என காயத்திற்கு சுண்ணாம்பு வைத்து விடுகிறார்.


விஜயா ரோகினியையும் சுருதியையும் உதவிக்கு வைத்துக்கொண்டு சமையல் வேலையை செய்து முடிக்கிறார். மீனா நான் போய் உதவி செய்கிறேன் என ஒவ்வொரு முறையும் எழுந்து வர நாச்சியார் பாட்டி இழுத்து உட்கார வைக்கிறார். 

அதன் பிறகு எல்லோரும் சாப்பிடுவதற்காக உட்கார மீனா நாங்க எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியா தான் சாப்பிடுவா என்று விஜயா செல்ல பாட்டி அதனால தான் அவளை முதல்ல உட்கார வைத்து இருக்கேன். எல்லாருக்கும் பரிமாறு என சொல்ல விஜயாவும் பரிமாறுகிறார். 


ஸ்ருதி கையில் கிழித்துக் கொண்டதால் சாப்பிட கஷ்டப்பட விஜயா ஊட்டி விட 11 தட்டு வேலை செய்யுது, மலேசியாவில் இருந்து 101 தட்டு வந்தா ஊட்டி விடுற கை இந்த பக்கம் வந்துடும் என சொல்ல விஜயா ஸ்ருதிக்கு ஊட்டி விடுவதை மீனா ஏக்கமாக பார்ப்பதை கவனிக்கிறார் பாட்டி. 

உடனே மீனாவை போய் ஸ்ருதி பக்கத்தில் உட்கார சொல்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்முடிவடைகிறது. 


Advertisement

Advertisement