• May 09 2024

மாடிப்படியில் நின்றபடி குட்டி வயிற்றைக் காட்டி போட்டோ ஷுட் நடத்திய ஆலியா பட்- பட ப்ரமோஷனுக்காக எடுக்கப்பட்டதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட்bன் மகள் தான் ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வந்த இவர் ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.இதனைத் தொடர்ந்து  இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை முன்னணி நடிகையாக உயர்த்தியது.


மேலும் சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான  RRR படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.இதனைத் தொடர்ந்து இவர் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் இணைந்து பிரம்மாஸ்திரம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.


இப்படம்  நாளை செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் நடிகை ஆலியா பட்  கர்ப்பத்துடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரம்மாஸ்திரா படத்தின் ரிலீஸை ஒட்டி இந்த போட்டோ ஷூட்டை  நடத்தி உள்ளார்.


 மாடிப்படியில் நின்றபடி ஜீன்ஸ் மற்றும் கோட் அணிந்து ஆலியா பட் போட்டோஷூட் போட்டோக்களில் காட்சியளிக்கிறார்.நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதோடு தற்பொழுது அவர் கர்ப்பமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement