• Apr 28 2024

ஜி5 ஓடிடி தளத்தில் சாதனை படைத்த 'அகிலன்'... வித்யாசமான முறையில் கொண்டாடிய நிறுவனம்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் N.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவான திரைப்படம் 'அகிலன்'.  இதில் பிரியா பவானி ஷங்கர், ஹரிஷ் உத்தமன், தன்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, மதுசூதன் ராவ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 


இத்திரைப்படமானது கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஜீ5 தளத்தில் உலகம் முழுதும் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்பட்டது. அந்தவகையில் ஜெயம் ரவி அப்பா மகனாக கலக்கிய இப்படமானது  ஜீ5 ஓடிடியில் பெரும் வரவேற்பை பெற்றது. 


இதனையடுத்து குறுகிய காலத்தில் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர நிகழ்வை சென்னை மெரினா மாலில் நடத்தியுள்ளது ஜீ5 நிறுவனம். இந்த நிகழ்வில் 5000க்கும் அதிகமான ரசிகர்கள் கலந்து கொண்டு ஜீ5 தளத்தின் ஒரு வருட வாடிக்கையாளர் சந்தாவை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்த புகைப்படங்கள் ஆனது வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement