• Mar 16 2025

மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த அஜித் மகன்.. 3 தங்க மெடலை தட்டித்தூக்கி அசத்தல்.!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் அஜித்குமார் சினிமாவில் மட்டும் இல்லாமல் கார், பைக் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை வெற்றி பெற்றார்.

அஜித் குமார் தனது குடும்பம் மீதும் மிகவும் அக்கறை கொண்ட நபராகவும் காணப்படுகின்றார். இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித்தின் மகன் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக காணப்படுகின்றார்.

அதிலும் குறிப்பாக கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் இவர் சென்னையின் எஃப்சி ஜூனியர் அணியில் இடம்பெற்று இருக்கிறார். மேலும் அங்கு நடைபெற்ற ஓட்டப்பந்தயத்திலும் கலந்து முதலிடத்தை பெற்றுள்ளார்.


இந்த நிலையில், தனது மகன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பிடித்து அசத்திய வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தந்தையைப் போலவே மகனும் விளையாட்டில் சீறிப் பாய்ந்துள்ளார் என வாழ்த்தி வருகின்றனர்.  

இதேவேளை, முதலில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலாம் இடம் பெற்ற ஆத்விக், அதன் பின்பு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் முதலாவது இடத்தை பெற்றார். அவர் பங்கு பற்றிய மூன்று ஓட்ட போட்டியிலும் முதல் இடத்தைப் பெற்று தங்க மெடல்களை தனதாக்கி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement