• Jan 19 2025

அஜர்பைஜானில் இருந்து நேரே கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு சென்ற அஜித்! விஜயகாந்த் சமாதிக்கு செல்வாரா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், தேமுதிக-வின் தலைவருமாகவும் காணப்பட்டவர் தான் நடிகர் விஜயகாந்த். தனது வாழ்நாட்களை சினிமா, அரசியல் என இரண்டிலும் தனியொரு சகாப்தமாக திகழ்ந்திருந்தார்.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சினிமா, அரசியல் என இரண்டிலும் விலகியிருந்த விஜயகாந்த், இறுதியாக 28ம் திகதி  மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

விஜயகாந்தின் மரண செய்தி ஒத்துமொத்த தமிழ் நாட்டையே உலுக்கியது. பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள், தொண்டர்கள் என அனைவரும் கண்ணீரில் மூழ்கி காணப்பட்டனர். 


இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான ரஜினி, விஜய் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தனர். எனினும், என்னும் சில முக்கிய சினிமா நட்சத்திரங்கள் நேரில் வர முடியாமல் காணப்பட்டனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் நடிகர் அஜித் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அதன்படி, அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அஜித் சென்னை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இதனால் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஜித் இறுதி அஞ்சலி செலுத்த இன்று செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி அஜித் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement