• Jan 19 2025

பார்க்கில் வெட்டியாக வேர்கடலை சாப்பிட்ட மனோஜ்.. முத்துவிடம் வசமாக சிக்கினார்! வீட்டில் பூகம்பம் வெடிக்குமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய தினம் வெளியான எபிசோடில் என்ன நடக்குது என பார்ப்போம்.

காலையில் இன்னும் காபி வரல என விஜயா கத்திட்டு இருக்க, நீ கழுத மாதிரி இல்ல குதிரை மாதிரி கத்துனா கூட மீனா வரமாட்டா.. அவ காலைல நாலு மணிக்கு எழுந்துச்சு பூக்கடைக்கு போய் பூ வாங்கிட்டு வந்து கடையை திறக்கிற வேலையை பார்க்க ஆரம்பிச்சிருப்பா என்று அண்ணாமலை கூறுகிறார். 

வேறு வழியின்றி விஜயா கிச்சனுக்கு சென்று  காபி பொடி தேட, ஒவ்வொருத்தராக காபி கேட்டு வந்து கடைசியில் நாங்க வெளியில் சாப்பிடுகிறோம் என்று கிளம்பி செல்ல, இப்போ நான் எப்படி சாப்பிடுறது என விஜயா புலம்புகிறார்.


இதை தொடர்ந்து, முத்து டிபன் எடுத்து வந்து வச்சு எல்லாரையும் கூப்பிட்டு சாப்பிட சொல்லுங்க என்று சொன்னது எல்லாரும் கிளம்பி போயிட்டாங்க நான் மட்டும்தான் இருக்கேன் அப்ப நீங்க சாப்பிடுங்க, மீதியை வெளியில யாருக்காவது கொடுத்துடறேன் என சொல்கிறார். 

இதையடுத்து, இரவு எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க திடீரென்று யாரோ ஒருவர் கதவை தட்டி அவசரமாக இரண்டு மாலை வேணும் என்று சொல்ல, கோவத்தில் விஜயா மாலை எல்லாம் கிடையாது அவங்க ஊருக்கு போய் இருக்காங்க என்று சொல்லி கதவை சாத்தி விடுகிறார். 


மறுநாள் இதை வைத்து முத்து பிரச்சனை செய்ய, கொஞ்சம் விட்டா என்னையே ஆர்டர் எடுக்க சொல்லுவ போல என்று விஜயா கேட்க எடுத்தா என்ன தப்பு என்று முத்து பதிலடி கொடுக்கிறார். 

இடையில் வந்த ஸ்ருதி,  நைட் டைம்ல எல்லாம் கஸ்டமர் வந்தா ஆன்ட்டிக்கு தூக்கம் கெடாத அதுக்கப்புறம் அவங்களுக்கு சுகர் பிபி எல்லாம் வந்துடும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். 


மேலும் மனோஜ், நான் பெரிய கம்பெனில பெரிய வேலையில இருக்கேன் என்னை பாக்க நிறைய பேர் வீட்டுக்கு வருவாங்க இப்படி வாசல்ல கடைய போட்டு உட்கார்ந்து இருந்தா அவங்க என்ன நினைப்பாங்க என் கௌரவம் என்ன ஆகிறது? என்று பேச முத்து திட்டி அனுப்பி விடுகிறார். 


மறுபக்கம், மீனாவின்  பூக்கடை பற்றிய நோட்டீசை சவாரி செல்லும் வழியில் கொடுத்துச் செல்கிறார்.  பக்கத்தில் பார்க் இருக்க பார்க்கில் நிறைய பேர் இருப்பாங்க அங்க போய் கொடுக்கலாம் என்று முத்து உள்ளே செல்ல, திடீரென மனோஜ் பார்க்கில் வேர்கடலை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதை வீடியோ எடுக்கிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement