• May 09 2024

'இந்த நடிகரை அஜித்திற்கு பிடிக்கவே பிடிக்காது'- சூசகமாகப் பேசி சர்ச்சையில் சிக்கிய யூடியூப் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. அந்த வகையில் இவர் தற்பொழுது தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை எச். வினோத் இயக்குவதோடு போனிகபூர் தயாரித்து வருகின்றார்.

மேலும் பப்லிசிட்டி விரும்பாத நடிகராக இருக்கும் அஜித் பற்றி புகழ்ந்து பேசாத நடிகர்களே இல்லை எனலாம். இந்த நிலையில் ஒரு பிரபலம் மட்டும் அவர் குறித்து பல நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகிறார். அதாவது வலைப்பேச்சு என்னும் யூடியூப் தளத்தில் பேசுபவர் தான் அந்தணன்.

இவர் ஒரு பேட்டியில் அஜித் பற்றி நம்பமுடியாத விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது சில வருடங்களுக்கு முன்பு தமிழில் பிரபலமாக இருந்த ஒரு ஹீரோயினை அஜித்தும், மற்றொரு பிரபல நடிகரும் தீவிரமாக காதலித்ததாக கூறியிருக்கிறார்.

அப்போது அஜித் வேண்டுமென்றே அந்த நடிகரின் படப்பிடிப்பு நடந்த இடத்தின் வழியாக அந்த நடிகையுடன் காரில் சென்றதாகவும், இதைப் பார்த்த அந்த நடிகர் கடும் அப்செட்டில் படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இப்படி அவர் அஜித்தை பற்றி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நடிகர் அஜித்திற்கு திரையுலகில் இதுவரை ஒரே ஒரு நடிகரை மட்டும் பிடிக்கவே பிடிக்காது என்றும் அவர் தற்போது தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் அண்ணன், தம்பி நடிகர்களில் அண்ணன் நடிகரை தான் அஜித்துக்கு பிடிக்காது என்று அவர் சூசகமாக கூறியுள்ளார்.

இப்படி அவர் கூறியதை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் அவருக்கு அஜித்தை பிடிக்காத காரணத்தால் தான் இப்படி பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக திட்டி வருகின்றனர்.

இப்படி ஒருபுறம் அவருக்கு எதிராக கருத்துக்கள் வந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் ரசிகர்கள் அவர் கூறிய அந்த நடிகர்கள் யார் என்ற தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். அதில் அஜித் காதலித்த அந்த நடிகை ஹீரா என்றும், அவர் வெறுப்பேற்றிய அந்த நடிகர் சரத்குமார் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சூர்யாவைத்தான் அவர் அண்ணன் நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பல நிகழ்ச்சிகளில் சூர்யாவும் அஜித்தும் நன்றாக சிரித்து பேசி இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சூர்யாவின் திருமணத்திற்குக் கூட அஜித் தன் மனைவி ஷாலினியுடன் வந்து வாழ்த்து தெரிவித்தார். அப்படி இருக்கும்போது அஜித்தை பற்றி இப்படி ஒரு தகவல்களை கூறிய வலைப்பேச்சு அந்தணனுக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement