• May 18 2024

வனிதாவைத் தொடர்ந்து அவருடைய மகள் ஜோவிதாவும் bigboss நிகழ்ச்சிக்கு போகின்றாரா?- அவரே போட்ட பதிவு- குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 8 months ago

Advertisement

Listen News!

பல சர்ச்சைகளுக்குப் பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை வனிதா. இந்த நிகழ்ச்சியை அடுத்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றியிருந்தார்.

மேலும் தற்போது, அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவது மட்டும் இன்றி, ட்ரெஸ் ஷாப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.மேலும் யூடியூப் சேனல் ஒன்றையும் தனியாக நடத்தி வருகின்றார்.இவரைப் போலவே இவருடைய மகள் ஜோவிதாவும் யூடியூப் சேனல் மூலம் பிரபல்யமானவர்.மேலும் சமீபத்தில் இவர் தன்னுடைய 18-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஜோவிகாவின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக பார்க்கப்பட்டது.


இந்த நிலையில் வனிதாவும் தன்னுடைய மகள் மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேருக்கு சொந்தமான நடிப்பு பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சியும் பெற்றுள்ளதாக கூறி இருக்கிறார். ஜோவிகா படித்த இந்த பயிற்சி பள்ளியில் தான், தற்போது பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கும் தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷன், பிரீத்தி ஜிந்தா, வருண் தவான் ஆகியோர் பயின்றதாகவும் வனிதா தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னுடைய மகளுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், நல்ல கதை அமைந்தால்... விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் நிற்பது போன்ற புகைப்படத்தை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.  


இதனால் நெட்டிசன்கள் பலர் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாரா? சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஜோவிகா 18 வயதை எட்டி விட்டதால் பிக்பாஸ் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement