• Jul 07 2024

நடிகை த்ரிஷா எப்போ தான் கல்யாணம் செய்வாங்க- எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மாஸ் ஹிட் கொடுத்து வருகின்றார்.

இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ரஜினி, கமல் ,விஜய் ,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்நிலையில் த்ரிஷாவைப் போலவே கடந்த 20 வருடங்களாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நயன்தாரா இவருக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த வாரம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் நயன்தாரா திருமணம் முடிந்த பிறகு த்ரிஷாவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் அதிகமாக எழுந்துள்ளன . தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் த்ரிஷா நடிகை நயன்தாராவை விட ஒன்றரை வயது மூத்தவர்.

அந்தவகையில் கடந்த 2015ல் தொழில் அதிபர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் சில வருடங்களிலேயே கருத்து முரண்பாடுகளால் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர்.

இந்நிலையில் த்ரிஷாவுக்கு எப்போது திருமணம் நடைபெற உள்ளது, என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழ ஆரம்பித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement