• Oct 08 2024

நான்கு நாளும் ஒரே ஆட்டம் பாட்டம் தான்.. இது என்ன படப்பிடிப்பா? பார்ட்டியா? த்ரிஷாவின் ஜாலியான பதிவு..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா சென்னையில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அதில் ஜாலியாக ஆட்டம் பாட்டத்துடன் இருந்ததாகவும் இது படப்பிடிப்பு போல் தெரியவில்லை என்றும் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை த்ரிஷா தற்போது கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இந்த பாடல் காட்சியின் டான்ஸ் ரிகர்சல் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா உட்பட இந்த பாடலில் நடிக்கும் நட்சத்திரங்கள் ரிகர்சல் பார்த்து வருகின்றனர் என்றும் அந்த ரிகர்சல் குறித்த புகைப்படம் வீடியோக்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் நான்கு நாட்கள் ரிகர்சல் பார்த்ததே தெரியவில்லை என்றும் ஜாலியாக இருக்கிறது என்றும் பதிவு செய்துள்ளதை எடுத்து அந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. நடிகை த்ரிஷா இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை படப்பிடிப்பில் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கமல்ஹாசன், சிம்பு சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை படமாக்க மணிரத்னம் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement