• Jan 27 2025

பாடசாலை நினைவுகள் குறித்து மனம்திறந்து பேசிய நடிகை சாய்பல்லவி..!

Mathumitha / 22 hours ago

Advertisement

Listen News!

அமரன் திரைப்படத்தில் இந்து ரெபேக்கா வர்க்கீஸ் எனும் கதாபாத்திரத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தார். அதிக கவர்ச்சி காட்டி நடித்து முன்னேறிவரும் நடிகைகளின் மத்தியில் மிகவும் ஒழுக்கமாக நடித்து முன்னேறியுள்ளார்.


தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் தற்போது நேர்காணல் ஒன்றில் தனது பள்ளி பருவ நினைவுகள் குறித்து ஒரு சில வார்த்தைகளை உரையாடியுள்ளார்.நடிப்பு மாத்திரமின்றி நடனம் ஆடுவதிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் நடிகை பல திறமைகளை வைத்து முன்னேறி வருகின்றார்.


குறித்த பேட்டியில் "நான் வகுப்பை கட் அடித்து விட்டு ஆடிட்டோரியத்தில்தான் நடன பயிற்சி செய்வேன். நான் வகுப்பில் இல்லாதது எனது ஆசிரியைகளுக்கு தெரியும். ஆனாலும், எனது முயற்சி தெரிந்து என்னை கண்டித்தது இல்லை. இளம் வயதிலேயே மேடை பயம் என்பது எனக்கு இல்லாமல் போனதுதான் நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணமென்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement