• May 13 2024

குட்டை சோட்சில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை ரெஜினா-வைராகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ரெஜினா. இவர் 'கண்ட நாள் முதல்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தில் சிவகார்த்திகேயன், விமல் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட் ஆன போதும் தமிழ் சினிமாவில் ரெஜினாவுக்கு பெரிதாக பட வாய்ப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனினும் இதனால் மனம் தளராது நடிகை ரெஜினா கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லி வேடங்களிலும் நடித்து வருகின்றார். அதாவது நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'சக்ரா' படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அத்தோடு நடிகர் அருண் விஜய்யின் "பார்டர்" என்ற படத்திலும் எதிர்மறை கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்து இருக்கின்றார்.

இந்நிலையில் கதாநாயகியாக மட்டுமல்லாது வில்லியாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ரெஜினா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இவர் அவ்வப்போது ரசிகர்களைக் கவரும் விதத்தில் கவர்ச்சியான போட்டோஷூட்களை நடாத்தி அவற்றை இணையத்தில் பதிவிட்டும் வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்திலும் நடிகை ரெஜினா நீல நிற கவர்ச்சி உடையில் தான் நடாத்திய அசத்தலான போட்டோஷூட்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை மனம் குழம்பச் செய்து இருக்கின்றார். அப்போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement