• Apr 27 2024

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இத்தனை மொழி தெரியுமா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

stella / 9 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு தேசிய அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சோஷியல் மீடியாவில் பெரும்பாலும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகாவை பல லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.

நடிகை ராஷ்மிகா தனது தொழில் வாழ்க்கையில் பல கேரக்டர்களை ஏற்று சூப்பராக நடிப்பதற்காக மட்டுமல்ல ஃபேஷன் மற்றும் அழகிற்காகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவர் தமிழில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார்.


இது மட்டுமின்றி பாலிவுட் திரையுலகில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவக இருக்கும் ராஷ்மிகா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.


இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனக்கு 6 மொழி தெரியும் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் உங்களுக்கு ஆறு மொழி தெரியுமா என ஆச்சரியமாகக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement