• May 17 2024

23 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் ஜோடி சேரும் நடிகை ரம்யா கிருஷ்ணன்- தலைவர் 169 படத்தின் புதிய அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இயக்குநராக நெல்சன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் பீஸ்ட். இத் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தாலும் விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குவதாக கூறப்படுகின்றது. இந்தப்படத்திற்கு தற்பொழுது தலைவர் 169 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே அப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் பீஸ்ட் படம் சொதப்பியதால் ரசிகர்கள் தற்பொழுதும் விமர்சித்து வருகின்றனர்.

அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பானது இன்னும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகின்றது. இது போல இப்படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்தும் அவ்வப் போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தலைவர் 169 இல் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ரஜினியுடன் ஏற்கனவே படையப்பா படத்தில் நடித்து அசத்தியிருந்தார். 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி அமைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்து எனலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement