• May 19 2024

முதன்முறையாக பவர் ஸ்டாருடன் ஜோடி சேரும் நடிகை ப்ரியங்கா மோகன்- அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ப்ரியங்கா மோகன். இவரின் முதல் படமே வெற்றியைக் கொடுத்ததால் தொர்ந்து படவாய்ப்புக்கள் கிடைத்தது. அதன் படி  மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார்.

இதன் பின்னர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில், தென்னிந்திய அளவில் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன் அடுத்ததாக முன்னணி நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பமாகிறது என தெரிவிக்கின்றனர்.


இப்படத்தின் மூலம் முதல் முறையாக பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பிரியங்கா. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும், பவன் கல்யாண் மற்றும் பிரியங்கா மோகன் சூப்பர் ஜோடி என கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement