• Apr 28 2024

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா- புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாலி திரைப்படத்தில் ஷோனா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஜோதிகா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் ,அஜித், பிரசாந்த், விக்ரம், கமல், சரத்குமார், சூர்யா, மாதவன் எனப் பல முக்கிய நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானார்.

நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்த பின்னர் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது  ஜியோ பேபி என்பவர் இயக்கவுள்ள ’காதல்’ என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.


இதில் இவருக்கு ஜோடியாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இன்று ஜோதிகாவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement