• Apr 30 2024

கல்யாணம் ஆகாமலே நடிகை இலியானா கர்ப்பம்.. அவரே வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா. அதுமட்டுமல்லாது இவர் தமிழில் 'நண்பன்' என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். அந்த படத்தில் இடம் பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாட்டுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.


இலியானா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருபவர். இதனால் அவருக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை அவர் வெளியிட்ட பதிவில் "நல்ல செய்தி, விரைவில் வரவுள்ளது. என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என தெரிவித்து உள்ளார். 

மேலும் அவர் வெளியிட்ட புகைப்படத்தில், குழந்தைகளின் உடைகளை வெளியிட்டு, அதில், சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் படும்படியான எழுதப்பட்ட வாசகம் காணப்படுகிறது. எனினும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் அப்பதிவில் வெளியிடவில்லை. 


அவரது இந்த பதிவை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அதாவது உங்களுக்கு திருமணம் ஆகியுள்ளதா? என்றும் குழந்தைக்கு தந்தை யாரென்றும் கேட்டு உள்ளனர். அந்தவகையில் ஆரம்பத்தில் இருந்தே தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இலியானா எந்த விவரங்களையும் வெளியிடாமல் இருந்து வந்துள்ளார். 


இருப்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். 'எப்போதும் சிறந்த கணவராக இருப்பவர்' என அவரை தனது இன்ஸ்டாகிராமில் இலியானா குறிப்பிட்டார். ஆனால், அவர்களுக்கு இடையே திருமணம் நடந்து விட்டதா? என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் 2019-ஆம் ஆண்டில் இந்த நட்பு முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது கர்ப்பமாக இருக்கும் இலியானாவின் குழந்தைக்குத் தந்தை யார் என்று தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பிப் போயுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement