• Jan 19 2025

அப்பாவின் இரண்டாவது திருமணத்தில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த நடிகர் விஜய்- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குநராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குநர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை தயாரிப்பாளர், 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குநராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். 

அதனை தொடர்ந்து மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் பணியாற்றி வருகிறார்.


இவர் கடந்த 1973ஆம் ஆண்டு ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார் . இதன்பின் 1974ஆம் இவர்களுக்கு நடிகர் விஜய் மகனாகப் பிறந்தார்.விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மாதத்தை சேர்ந்தவர் ஆவார். அதே போல் தாய் ஷோபா இந்து மாதத்தை சேர்ந்தவர்.

இவர்களின் திருமணம் இந்து முறைப்படி தான் முதலில் நடந்தது. தொடர்ந்து விஜய்க்கு 6 வயது இருக்கும்போது எஸ்.ஏ.சி - ஷோபா இருவரும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர் .இந்த விஷயத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது Youtube சேனலில் கூறியிருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement