• May 18 2024

நடிப்பை தாண்டி பிஸ்னஸ் செய்யும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு -வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானவர் என்பது தெரிந்ததே. அத்தோடு தற்பொழுதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு காதலுக்கு மரியாதை என்ற படம் மூலம் காலடி எடுத்து வைத்தாலும் சினிமாத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துக்கொண்டிருந்த சூரிக்கு 2009 ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் அவரை காமெடி நடிகராக மக்கள் மத்தியில் கொண்டு சென்றது..


அதற்க்கு முன் 10 வருடங்களாக பல படங்களிலும், சிரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

அவர் நடிப்பது காமெடியன் ரோல் தான் என்றாலும் உடலை ஹீரோவை போல பிட் ஆக வைத்திருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். அவர் சீமா ராஜா படத்தில் தனது சிக்ஸ் பேக் காட்டி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார்.நடிகர் சூரி மதுரைக்காரர் என்பது நமக்கு தெரியும், சென்னையில் வந்து செட்டில் ஆனாலும் சொந்த ஊரில் நிறைய உணவகங்கள் திறந்து தொழில் செய்து வருகிறார்.


அதுவே அரசு மருத்துவமனை வளாகத்தில் குறைந்தவிலையில் உணவை வழங்கி கஷ்டப்படும் மக்களுக்காக நடத்தி வருகிறார்.இதுதவிர நிஜ வாழ்க்கையிலும் உதவி என்று அவரை நாடி வரும் பலருக்கும் உதவி வருகிறாராம் சூரி.இந்நிலையில் இவருக்கு 40 கோடிக்கும் மேல் சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement