• May 01 2024

தடல்புடலாக நடந்த தீனாவின் திருமணத்தில் மாஸாகக் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி- கைதி பி.ஜி.எம்முடன் வெளியாகிய வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தீனா. இந்த ஷோவிற்குப் பின்னர்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்பெஷல் ஷோக்களில் கலந்துகொள்ள வரும் பிரபலங்களுக்கு போனில் அழைத்து அவர்களை சரமாரியாக கலாய்த்து தள்ளி வந்தார்.

இவரின் டைமிங் காமெடி வேறலெவலில் ரீச் ஆனது. சின்னத்திரையில் கலக்கி வந்த தீனா, முதன்முறையாக தும்பா என்னும் திரைப்படத்திலும் காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.  இதையடுத்து தீனாவுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் படம் முழுக்க கார்த்தியுடனே பயணிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார்.


கைதி படத்துக்கு பின்னர் மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தீனா. மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்து அசத்தினார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் சினிமாவில் தீனாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. இதனால் படிப்படியாக வளர்ந்து வந்த தீனா, அண்மையில் தன் சொந்த ஊரில் மூன்று அடுக்கில் பிரம்மாண்டமான மாடி வீடு கட்டி பால்காய்ச்சினார். 

இந்நிலையில், புது வீடு கட்டிய கையோடு நடிகர் தீனாவுக்கு  அண்மையில் திருமணமும் நடந்து முடிந்துள்ளது. அவர் பிரகதி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் ஒரு கிராபிக் டிசைனர் ஆவார். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இவர்களது திருமணத்தில் கலக்கப்போவது யாரு சரத் உள்பட ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். 


தீனாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இந்த நிலையில் தீனாவின் திருமணத்திற்கு நடிகர் கார்த்தி சென்றுள்ளார். கார்த்தி மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement