• May 08 2024

டாடா பட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசனைச் சந்தித்த நடிகர் கவின்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் கவின். அவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் டாடா. கணேஷ் கே பாபு இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.

அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று தமிழகமெங்கும் 400 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.மேலும் “நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு ஃபீல் குட் படமாக டாடா உள்ளது. கவினும், அபர்ணா தாஸும் எதார்த்தமாக நடித்துள்ளனர். படக்குழு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளது. திரையரங்கில் குடும்பத்தோடு என்ஜாய் பண்ணி பார்க்க வேண்டிய படம் vன ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இப்படியான ஒரு நிலையில் கவின் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்துள்ளார்.இது குறித்த புகைப்படத்தை தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement