• Sep 27 2023

சீரியல் நடிகை ஆலியா மானசாவின் மகன் இம்புட்டு வளர்ந்திட்டாரே - வைரலாகும் கியூட் வீடியோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா. இத்தொடரில் நடித்த கதாநாயகன் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.


இந்த தம்பதியினருக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆலியா மானசா 'ராஜா ராணி 2' தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் இத்தொடரில் நடித்து வந்தார் ஆலியா.இவருக்கு அர்ஷ் என்னும் அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது.


தற்போது ஆலியா மானசா சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடரினை பார்க்கவே இல்லத்தரசிகர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள்.இவரின் சிறந்த நடிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.


சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர் தனது மகனான அர்ஷ் உடன் கொஞ்சி விளையாடும் வீடியோவினை பகிர்ந்திருக்கிறார்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement