• Apr 28 2024

அட நம்ம சல்மான்கானா இதைச் செய்தது,மகிழ்ச்சியில் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ(வீடியோ இணைப்பு)

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திர நடிகராகத்  திகழ்பவர் நடிகர் சல்மான்கான் ஆவர். சல்மானின் திரைப்படங்கள் எப்போதுமே வெற்றி திரைப்படங்கள் ஆகவே ரசிகர்களால் கணிக்கப்பட்டு வருகிறது.


அந்த அளவுக்கு ஹிந்தி திரையுலகில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார. அது மட்டுமல்லாது சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத்  தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். 


இந்நிலையில் பொதுவாகவே பிரபலங்கள் செய்யும் அனைத்து விடயங்களையும் ரசிகர்கள் வைரல் ஆக்குவது வழக்கமான ஒரு விடயமாகும். அந்தவகையில் நேற்றைய தினம் சிறப்பான முறையில் கணபதி சதுர்த்தி அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், அர்பிதா கான் மற்றும் ஆயுஷ் ஷர்மா வீட்டில் நடந்த கணபதி பூஜையின் வீடியோவை சல்மான் கான் பகிர்ந்துள்ளார். பூஜையை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சல்மான் ஸ்ரீ கணேஷ் ஜிக்கு 'ஆரத்தி' செய்தார். 

இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிரும்போது, ​​​​"கணபதி பாப்பா மோரியா!" என்று எழுதினார். இந்த பூஜையில் சல்மான் தவிர, கத்ரீனா கைஃப், விக்கி கவுஷல், சோஹைல் கான், ஹெலன், ஜெனிலியா தேஷ்முக், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Advertisement

Advertisement

Advertisement