• May 19 2024

அடேங்கப்பா....மூன்றே நாளில் இத்தனை கோடியா? வசூலில் மிரள வைக்கும் ஜெயிலர்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி - நெல்சன் காம்போவில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்நிலையில், ஜெயிலர் படத்திற்கு முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ஜெயிலர் சம்பவம் செய்துள்ளது.

அதிலும்  கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான ஜெயிலர் திரைப்படம் இன்று மூன்றாவது நாள் முடிவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான ஜெயிலர் கண்ணா பின்னான்னு வசூலை தட்டி தூக்கிக் கொண்டிருக்கிறது.

அதிலும் வீகென்ட் நாளான இன்று, ரிலீஸ் ஆன மூன்றாவது  நாள் முடிவில் 210 கோடியை கடந்துள்ளது. அது மட்டுமல்ல நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால்  சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அலை அலையாய் திரையரங்கில்  குவிவது உறுதி. இதனால் 4வது நாளான நாளை 280 கோடியை ஜெயிலர் வசூலித்து விடும்.


இது மட்டுமல்ல 600 கோடி, 700 கோடி என ஒரே மாதத்தில் தமிழ் சினிமாவின் அடையாளமாக உலக அளவில்  ஜெயிலர் வசூலை தட்டி தூக்க போகிறது. இதனால்  படக்குழுவினர் மட்டுமல்ல ஒட்டுமல்ல திரை உலகமே ஜெயிலர் படத்தின் கலெக்சனை பார்த்து மிரண்டு போய் உள்ளனர் என்றே சொல்லலாம்.



Advertisement

Advertisement