• May 08 2024

விடுதலை படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- அடுத்தகட்ட பணிகளில் மும்முரம் காட்டும் படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராக வலம் வருபவர் தான் சூரி. இவர் தற்பொழுது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

 எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து ஸ்டுடியோ இல்ல.. உண்மையான காடு.. என பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.


இந்நிலையில், 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என்று நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement