• May 12 2024

பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர் ஒரு சாடிஸ்ட்- சல்மான்கான் மீது குற்றச் சாட்டுக்களை முன் வைக்கும் முன்னால் காதலி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தாான் சல்மான்கான்.இவர் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய பிரபலமாகவும் வலம் வருகின்றார்.இருப்பினும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.அத்தோடு இவரை இவரது ரசிகர்கள் எப்போதும் விட்டுக் கொடுத்ததும் இல்லை.

மேலும் 56 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் இவர் தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் காதல் வலையில் சிக்கியவர்.குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், சினேகா உல்லால்,  சோமி அலி, என இவரது காதலில் சிக்கி கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


இந்த நிலையில் இவருடன்  அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் பாகிஸ்தான் நடிகையான சோமி  அலி தான். 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இருவரும் சுமார் 8 வருடம் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது, கருத்து வேறுபாடு மற்றும் சல்மான் கானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சோமி அலி அவரை  விட்டு பிரிந்தார்.


இவ்ரகள் இருவரும் பிரிந்த பின்னர் சோமி  அலி, பாலிவுட் திரையுலகை விட்டே மொத்தமாக ஒதுங்கி... பாகிஸ்தானுக்கு பறந்தார். இவர்கள் இருவரும் பிரிந்து 20 வருடங்கள் ஆன போதிலும், அவ்வப்போது சில பேட்டிகளில் சல்மான் கானை விமர்சித்து பேசியுள்ளார். 

அந்த வகையில் தான் தற்போது இவர் சல்மான் கான் பெயரை குறிப்பிடாமல்... அவர் நடித்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இதுகுறித்து தன்னுடைய பதிவில் அவர் கூறியுள்ளதாவது, " தயவுசெய்து அவரை கொண்டாடுவதை நிறுத்துங்கள். அவர் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர். ஒரு சாடிஸ்ட் என  குறிப்பிட்டுள்ளார் இவரது இந்த அதிரடி குற்றச்சாட்டு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Advertisement

Advertisement

Advertisement