• Mar 27 2023

ஓலை கொட்டகையில் பாடம் நடத்தும் தனுஷ்- வாத்தி படத்திலிருந்து வெளியாகிய புதிய போஸ்டர்

stella / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படங்களில் திருச்சிற்றம்பலம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்ததாக வெளியான நானே வருவேன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனை அடுத்து இவர் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் தான் வாத்தி.பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இந்தப்படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், பிப்ரவரி 17ம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


அத்தோடு இப்படத்தின் இசை வெளியீடு, வரும் பிப்ரவரி 4ம் தேதி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான அளவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலீத்தின் செவன் ஸ்கிரின் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின்மூலம் நேரடியாக தெலுங்கிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார் தனுஷ். தெலுங்கில் சார் என்ற பெயரில் படம் ரிலீசாகவுள்ளது.

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ள நிலையில், தற்போது குடியரசு தினத்தையொட்டி படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சிறப்பான வகையில் தனுஷ் காணப்படுகிறார். தொடர்ந்து ஓலை கொட்டகையில் அவர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாகவும் போஸ்டரில் காணப்படுகிறது.


ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என சுற்றி சுற்றி படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். தற்போது டோலிவுட்டிலும் நேரடியாக சார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement