• Apr 28 2024

எ கிரேட் லிஸ்டில் இருக்கும் தமிழ் சினிமா நடிகைகள்... அட எப்போதும் இவர் தான் லிஸ்ட்ல பெஸ்டா இருக்காரா...

subiththira / 6 months ago

Advertisement

Listen News!

சினிமா திரை உலகில் நடிகர்கள் நடிப்பதை வைத்து அவர்களை கிரேட் வரிசையில் பிரிப்பார்கள். அதில் எப்போதுமே அதிக டிமாண்டில் இருப்பவர்கள் ஏ கிரேட் வரிசையில் இடம் பிடிப்பார்கள். இப்படி தமிழ் சினிமா நடிகைகள் வரிசையில் இருக்கும் நடிகைகள் தங்களின் நடிப்பினால் ஏ கிரேட் தரவரிசையில் இடம் பிடித்த ஆறு ஹீரோயின்கள் யார் என்பதை பார்ப்போம்.


மலையாளத் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தன்னுடைய சாந்தமான தன்னடக்கம் உடைய நடிப்பிலேயே ரசிகர்களை கவர்ந்தவர்.இவர் நடித்து வெளிவரும் திரைப்படங்களில் இவரை பார்த்து ரசிப்பதற்கே ஒரு கூட்டமே இருக்கிறது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுப்பதினாலேயே ஏ கிரேட் லிஸ்டில் இடம் பிடித்துள்ளார். 2 கோடி வரை இவர் தற்போது சம்பளம் வாங்குகிறார், இந்த லிஸ்டிலேயே குறைந்த சம்பளம் வாங்குவது இவர்தான்.


நடிகை தமன்னா தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் 2017 வரை பி கிரேடு ஹீரோயின் ஆகவே இருந்தார். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் தோல்வியை சந்தித்ததே ஆகும். அடுத்து அடுத்து இவரது படங்கள் தோல்வியை தந்தாலும் ஜெயிலர் திரைப்படத்தில் "காவலா " என்ற ஒரே பாடலின் மூலம் ஏ கிரேட் வரிசையில் மீண்டும் இடம் பிடித்து விட்டார். தற்போது கிட்டத்தட்ட 4-5 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குகிறார்.


நடிகை சமந்தா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கலக்கி கொண்டிருப்பவர். எவ்வளவுதான் சர்ச்சைகளுக்கு ஆளானாலும் தொடர்ந்து தன்னுடைய விடமுயற்சியை கைவிடாமல் இருக்கிறார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத போதிலும் சோர்ந்து போகாமல் மீண்டும், குஷி படத்தில் வேற லெவல் வெற்றியை கொடுத்து ஏ கிரேட் வரிசையில் தக்க வைத்துள்ளார். 4.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.


திருமணம் ஆனதும் பொதுவாக நடிகைகளுக்கு டிமாண்ட் குறைந்து விடும். ஆனால் குழந்தை பிறந்த பிறகும் மார்க்கெட் குறையாமல் முன்னிலை நடிகையாகவே வலம் வருபவர் காஜல் அகர்வால். அதிக சதவீத வெற்றியினை கொடுத்து, கிட்டத்தட்ட 6 கோடி வரை ஒரு படத்திற்கு வசூலிக்கிறார். சிறந்த முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் லீடிங் நடிகைகளில் ஒருவராக டாப்பில் இருப்பவர். தமிழ் திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக நீண்ட ஆண்டுகாலம் இருக்கிறார். இவர் கதை தேர்தெடுக்கும் விதம், மற்றும் அசாத்தியமான நடிப்பால் சுமார் 5 முதல் 11 கோடி வரை ஒரு படத்திற்கு இவருக்கு சம்பளம் வாங்குகிறார்.


எப்போது எ கிரேட் லிஸ்டில் இருப்பவர் நடிகர் திரிஷா. பல நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். 2000களின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை சார்மிங் ஹீரோயின் பட்டியலில் இருப்பவர் திரிஷா கிருஷ்ணன். நயன்தாராவை மிஞ்சும் வகையில் தற்போது கமல், மணிரத்தினம் கூட்டணியில் உருவாக்க உள்ள kh234 திரைப்படத்தில், திரிஷா சுமார் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.இந்த 6 பேர் லிஸ்ட்டிலே நடிகை திரிஷா தான் முன்னணி லிஸ்டில் இருக்கிறார். 


Advertisement

Advertisement

Advertisement