• May 18 2024

செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவியவர்களுக்கு பிரபல நட்சத்திர விடுதியில் பாராட்டு விழா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்து முடிந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவிகரமாக இருந்த விழா குழுவினர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் ரஹ்மான் கலந்து கொண்டனர்.

மேலும், அந்த வீடியோவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி இருந்தனர்.அதே போல, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையும் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். அந்நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், தமிழ் பண்பாட்டை போற்றும் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.


இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடைபெற்ற பாராட்டு விழா குறித்த புகைப்படங்களை ஆலங்குடி சட்ட மன்ற உறுப்பினரும் விளையாட்டு துறை அமைச்சருமான மெய்யநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில்,மாண்புமிகு கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின்  MLA அவர்கள் உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு., 44வது #ChessOlympiad போட்டியை வெற்றிகரமாக நடத்திட சிறப்புற பணியாற்றிய விழா குழுவினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி கௌரவித்த இனிய நிகழ்வின் போது." என கூறியுள்ளார்.


உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,"தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பான #44thChessOlympiad போட்டி மிகச் சிறப்பாக நடைபெற பங்களிப்பை வழங்கிய அரசு அலுவலர்-திரைத்துறையினர் உள்பட பல்வேறு துறையினரை  கௌரவிக்க, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டோம்" என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement