• May 26 2025

"96" பட ஜானுவா இது..? ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கௌரி கிஷனின் லேட்டஸ்ட் லுக்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் கௌரி கிஷன். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்துள்ளார். தமிழில் கௌரி கிஷன் அறிமுகமான படம் "96", இந்தப் படத்தில் சிறுவயது ஜானுவாக நடித்ததன் மூலம் அவர் பெரும் புகழைப் பெற்றார்.


தெலுங்கு திரையுலகில் பிரபலமாகியுள்ள கௌரி கிஷன் குழந்தை நட்சத்திரமாக "96" திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தார். சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கௌரி கிஷன். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. புதிய தோற்றத்தில் கௌரி மிகவும் அழகாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகின்றார்.


இதனை பார்த்த ரசிகர்கள், "இது நம் 96 பட ஜானுவா? ஆளே அடையாளம் தெரியலையே..!" என்று பெரும் ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். "96" படத்தின் வெற்றிக்கு பிறகு, கௌரி கிஷன் தனது நடிப்புப் பயணத்தை சிறப்பாகத் தொடர்ந்தார். சமீபத்தில் வெளியான "சூழல் 2" வெப் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 


இப்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் மூலம், கௌரி தனது அழகையும், புகழையும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement