• Jun 29 2024

துபாயில் கீர்த்தி சுரேஷுடன் என்னடா பண்ற.. இர்பானை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

யூடியூப் பிரபலம் இர்பான் துபாயில் கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் ’துபாயில் கீர்த்தி சுரேஷ் உடன் என்னடா பண்ற’ உள்பட பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூப் மூலம் பிரபலமானவர் இர்பான் என்பதும் அந்த பிரபலத்தின் மூலம் பல திரையுலக பிரபலங்களிடம் நெருக்கமாக இர்பான் பழகி உள்ளார் என்பதும் குறிப்பாக ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்த போது அங்கு நேரடியாக சென்று வீடியோ எடுத்ததை தனது யூடியூபில் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக இர்பான் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தனது மனைவிக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வீடியோ வெளியிட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய முயற்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்திருக்கும் இர்பான் சற்றுமுன் துபாயில் கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ’சூப்பர் நைஸ் பர்சன்’ என்று கேப்ஷாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் கேலியும் கிண்டலுமாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement