• Nov 09 2025

என்னை தப்பா காட்டுறாங்க.. இனி பேசவே மாட்டேன்! மும்பையில் திடீரென மாறிய சுசி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகி, பத்திரிகையாளர், ஆர்.ஜே நடிகை என்று பல முகங்களை கொண்டு திகழ்ந்தவர் தான் சுசித்ரா. இவர் தற்போது சேனல்களுக்கு கொடுக்கும் பேட்டி சர்ச்சைக்குரியதாக காணப்படுகின்றது. தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் என பல பிரபலங்கள் பற்றி அவர் கூறும் விஷயங்கள் விவாதத்தை கிளப்பியது. இதனால் ரீமா கல்லிங்கள் சுசித்ரா மீது புகார் கொடுத்திருந்தார்.

சுசித்ராவின் கேரியர் உச்சத்தில் இருக்கும்போது நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியருமான கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். இது அவர்களுடைய வீட்டார் நிச்சயக்கப்பட்டது. இரண்டு பேரின் திருமண வாழ்க்கையும் சுமுகமாக போய்க்கொண்டிருந்த நிலையில், இடையில் ஏற்பட்ட சுச்சி லீக்ஸ் விவகாரத்தினால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

2016 ஆம் ஆண்டு வெளியான சுச்சி லீக்ஸ் விவகாரத்தினால் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதில் தனுஷும்  திரிஷாவும் ஒன்றாக இருந்தது. நிக்கி கல்யாணி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்டவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் போன்ற பல  வெளியாகின. ஆனால் அந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டதோடு சுசித்ராவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதாகவும் கார்த்திக் குமார் கூறினார்.


இதனால் சில வருடங்கள் அமைதியாகவும் தலைமறைவாகவும் இருந்த சுசித்ரா மீண்டும் மீடியாக்கள் முன்பு பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். தற்போது கமலஹாசன், விஜய், ஷாருக்கான், திரிஷா, தனுஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் தொடர்பில் பேசி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது சுசித்ரா அளித்த பேட்டியில், என் நலம் விரும்புகளுக்கு... இப்போது நான் மும்பையில் Children's Publishingல் இருக்கிறேன். இது பல லட்சக்கணக்கான குழந்தைகளோடு என்னை கனெக்ட் செய்யும். பல youtube சேனல்களையும் பார்த்து வருகின்றேன். அதில் தலைப்புகளில் என்னை தவறாக சித்தரிக்கின்றார்கள். ஆனால் அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. இனி எந்த ஒரு youtube சேனலுக்கும் பேட்டி கொடுக்க மாட்டேன் எனது youtube சேனலில் மட்டும் தத்துவம், திரை விமர்சனம் சார்ந்த விஷயத்தை பகிர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement