விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் அருண் பிரசாத். இதில் அவர் பாரதி கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் அமைதி புறாவாக வலம் வந்த அருண் நாளடைவில் சண்டை சேவலாக மாறினார். மேலும் இவருடைய உண்மையான முகத்தை பார்க்க முடியவில்லை, இவர் நாடக மாடுகின்றார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்து சிறப்பாக ஆடி வந்த அருண் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த அர்ச்சனாவை தனது காதலியாக அறிமுகம் செய்து வைத்தார். அவர்களுடைய காதல் பலராலும் எதிர்பார்க்கப்பட்டதாக காணப்பட்டது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவுற்றதன் பின்னர் அருண் பிரசாத் வழங்கிய பேட்டியில் கூடிய சீக்கிரமே இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்கள். மேலும் சமீபத்தில் இவர்களுடைய பெற்றோர்களுடன் வழங்கிய பேட்டியும் வைரலாக இருந்தது.
இந்த நிலையில் அருண் பிரசாத் - அர்ச்சனா ஜோடி இன்றைய காதல் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளதோடு தங்களின் 5 வருட காதலை வெகுவாக கொண்டாடியுள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள் இதுபோல எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!