• Dec 07 2022

சொந்தக் கதையை சோகக் கதை போல சொல்லி... தன் மனைவி மீது பழி போடும் அசீம்... பிக்பாஸ் தட்டிக் கேட்காதது ஏன்..?

Listen News!
Prema / 1 month ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் 100 நாட்கள் போட்டியாளர்கள் தங்கி தங்கள் திறமைகளை போட்டியில் வெளிப்படுத்துவார்கள். இதில் அவரவர் மன உறுதி, தனிப்பட்ட நடத்தையை கவனிக்கும் மக்கள் அவர்களை வாக்களித்து பிடித்திருந்தால் இருக்க வைப்பார்கள் அல்லது பிடிக்காவிட்டால் வெளியேற்றுவார்கள்.


இந்நிலையில் அசீம் செய்த ஒரு விஷயம் தற்போது ரசிகர்களினால் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. அதாவது ஆடல் பாடல் டாஸ்க்கில் அசீம் கவிதை படிக்கிறேன் எனக் கூறிவிட்டு நைசாக கவிதைபோல் தனது வாழ்க்கைக் கதையை சொல்லி இருக்கின்றார். அதாவது தான் நல்லவர்போலும் மனைவி பிடிவாதம் பிடித்து பிரிந்து சென்றது போலும் பதிவிட்டார். 

அதன் பின்னர் மோனோ ஆக்டிங் என்று சொல்லி அதே கதையை மோனோ ஆக்டிங்கிலும் செய்து காட்டினார். இவ்வாறாக தனது வாழ்க்கையின் சம்பவத்தை தன் பக்கம் நியாயம் இருப்பதுபோலும், தனது துணைவியினால் துன்பம் அனுபவிப்பதுபோலும் ஒரு செய்தியை பதிவு செய்ய கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டார் அசீம்.


இதேபோன்று தம்முடைய சொந்தக் கதைகளை குறிப்பாக ஒரு பக்கம் மட்டுமே நியாயமான தகவலை ஒருவர் பதிவு செய்வது மறுபக்கத்தில் இருப்பவருடைய நியாயத்தை பறிக்கும் செயல் என்பதை பிக்பாஸ் உணர மறப்பது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பத்தொடங்கி உள்ளனர்.

அதாவது நாணயத்திற்கு இரண்டு பக்கம் உண்டு. அதுபோல அசீம் வாழ்க்கையிலும் இரண்டு பக்கங்கள் உண்டு. அசீமின் பக்கத்தை மட்டுமே பதிவு செய்து அவரின் மனைவியான மற்றொரு பக்கத்தை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையில் அசீமுக்கு மட்டும் அவர் தரப்பை பொதுவெளியில் சொல்ல வாய்ப்பு வழங்குவது சரியாக தெரியவில்லை என நெட்டிசன்கள் கேள்வி பிக்பாஸ் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.


அதுமட்டுமல்லாது இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் டேலண்ட் ஷோவில் சொந்த கதையை கொண்டு வந்தது சிறப்பான ஒரு விஷயம் என்று சொல்லி அசீமை பாராட்டினார்கள் ஹோம்மேட்ஸ்கள். அசீம் போன்ற கதைதான் அங்குள்ள சக போட்டியாளரான ஏடிகே கதையும். ஆனால் அவர் எங்கும் அதை சொல்லிக் காட்டிப் புலம்பவில்லை. ஒரே ஒருமுறை மட்டும் சக போட்டியாளரிடம் சொன்னார். 

இவ்வாறாக ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சொந்த கதை சோகக்கதை என்று ஒன்று இருக்கும். அதை கேட்டால் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதுபோல் அழகாக சொல்வார்கள். அத்தோடு அதை பக்கத்தில் அமர்ந்து கேட்டால் சீரியல் கலைஞரை விட அழகாக நடித்து சிறப்பாக சொல்வார்கள். 

இப்படி அசீமைப் போன்று ஒவ்வொருவரும் பிக்பாஸை தன் ஒருவரின் சுயநலத்திற்காக பயன்படுத்த தொடங்கினால் தனிப்பட்ட நபர் சுதந்திரம் பாதிப்பது மட்டுமல்லாமல் இது விமர்சனத்திற்குரிய ஒரு நிகழ்ச்சியாகவும் மாறும் என நெட்டிசன்கள் பதிவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாது பிக்பாஸ் இதை எல்லாம் கவனித்தில் கொள்ளாதது ஏன் எனவும் மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்டு வருகின்றனர்.