தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் இளையராஜாவை பாராட்டியமை ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, சிவகார்த்திகேயன், "இளையராஜாவின் இசை என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை நேரில் சந்தித்தது கனவு நேர்ந்தது போல உள்ளது " என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இளையராஜாவும் சிவகார்த்திகேயனை "நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறீர் மேலும் சிறந்த இடங்களை அடைய வாழ்த்துகள்!" என்று பாராட்டியுள்ளார். மேலும் இளையராஜாவை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன், அவரது இசையின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். இது தமிழ் சினிமாவில் இசைக்கும் நடிப்பிற்கும் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் தருணமாக அமைந்துள்ளது.
Listen News!