• Jan 19 2025

சத்யராஜ் யாருக்கு வில்லன்? யாருக்கு நண்பன்? வெளியான அதகள அப்டேட்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார் நடிகர் சத்யராஜ். இவர் தற்போதும் பிசியான நடிகராகவே நடித்து வருகின்றார். ஆரம்பத்தில் வில்லனாக, நடிகனாக, தயாரிப்பாளராகவும் கலக்கியிருந்தார். தற்போது தனக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து  வருகின்றார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளமென அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 240 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில் தான் ஹீரோவாக நடித்த பத்து படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் தனது மார்க்கெட்டை இழந்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் சத்யராஜ் நடிக்கும் அடுத்த இரண்டு படங்களில் முக்கிய கேரக்டர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.


அதன்படி சல்மான் கான்- ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் Sikandar படத்தில் சத்யராஜ் வில்லன் கேரக்டரில் நடிக்க  உள்ளாராம்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு நண்பராக நடிக்க உள்ளாராம் சத்யராஜ். இந்த படத்தின் சூட்டிங் ஜூன் 10ஆம் தேதி ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Advertisement