• Sep 21 2024

விபத்தில் சிக்கிய முல்லை இறந்து விட்டாரா..? நழுவிய கைகளால் அதிர்ச்சியில் கதிர்... இனி நடக்கப் போவது என்ன..? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய சீரியலாக தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இருந்து வருகிறது. அதில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் அதே கூட்டு குடும்பத்திற்கு திரும்பி இருக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது இந்த வார ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் மற்றும் முல்லை இருவரும் நடந்து செல்லும்போது ஒரு பைக் முல்லை மேல் மோதுகின்றது. அந்த பைக்கில் அடிபட்டு கர்ப்பமாக இருக்கும் முல்லை கீழே கதறியவாறு வயிறு அடிபடும் வகையில் விழுகின்றார்.


அதன் பின்னர் கதிர் அவசர அவசரமாக முல்லையை ஹாஸ்ப்பிட்டலுக்கு கொண்டு செல்கின்றார். கதிரின் கையை இறுகிப் பிடித்திருந்த முல்லையின் கை நழுவி கீழே விழுகின்றது. இதனால் கதிர் அதிர்ச்சி அடைகின்றார். 


முல்லை இறந்து விட்டாரா அல்லது மயக்க நிலைக்கு சென்று விட்டாரா என்பது தெரியவில்லை. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement