• May 12 2024

காவேரியை ஏமாற்றி விட்டு... ராகினியுடன் ஊர் சுற்றும் நிவின்... நேருக்கு நேர் பார்த்து ஷாக்கான கங்கா.. இனி நடக்கப்போவது என்ன..? 'மகாநதி' ப்ரோமோ வீடியோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் 'மகாநதி'. இந்த சீரியலில் நிவினின் அத்தை மகள் ராகினி என்பவர் கதையில் புது என்ட்ரியாக வந்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதில் நிவின் தனது அத்தை மகள் ராகினியுடன் இணைந்து கொண்டு பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அந்த காட்சியை நிவின் காதலித்து வரும் காவேரியின் அக்கா கங்கா பார்த்து விடுகிறார். எவ்வளவு நாள் காவேரியின் பின்னால் சுற்றிவிட்டு, தற்போது இப்படி ஏமாற்றுகிறாயா என்று சொல்லி அவர் நிவின் மீது கோபம் கொள்கிறார். 


ஆனால் உண்மையின் படி நிவினுக்கு ராகினியை பிடிக்கவில்லை, அவர் வேண்டா வெறுப்பாக கட்டாயத்தின் பேரில்தான் அவரை அழைத்துக்கொண்டு பைக்கில் வெளியில் சென்று இருக்கிறார். இது ஒரு வேளை காவேரிக்கு தெரிய வந்தால் நிவினின் காதலை முறிப்பாரா என்பது தெரியவில்லை. ஆகவே இதனை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement