• Jul 01 2024

மகனுக்காக விஜய்யின் அம்மா செய்த காரியம்- புகைப்படத்துடன் சின்னத்திரை நடிகை போட்ட முக்கிய பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு திரைப்படம் இன்று அதிகாலை தியேட்டர்களில் கோலாகலமாக ரிலீஸ் ஆகியுள்ளது.இப்படம் வெளியாகும் முன்னரே கோவில்களில் வழிபாடு, விதவிதமாக பேனர்கள், கட் அவுட்டுகள் என சிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகினறனர்.இன்று படம் வெளியானதையும் வேற லெவலில் செலிபிரேட் செய்து வருகின்றனர். 

ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் விஜய்யின் வாரிசு படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வாரிசு படத்தில் நடித்துள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் வாரிசு சிறப்பு காட்சியை நேற்று தனது மனைவி நிஷாவுடன் சென்று பார்த்துள்ளார். அப்போது விஜய்யின் அம்மாவான ஷோபாவும் வாரிசு படத்தை பார்த்துள்ளார். ஷோபாவுடன் நிஷாவும் கணேஷ் வெங்கட்ராமனும் செல்பி எடுத்துள்ளனர்.


அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நிஷா. மேலும் வாரிசு படம் ரொம்பவே பிடித்துள்ளது. ஒவ்வொரு பிரேமும் ஸ்டைலாக இருந்தது! விஜய் அண்ணா மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!!! ராஷ்மிகா மந்தனா க்யூட். விஜய் அண்ணா ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்கான பர்ஃபெக்ட் பேக்கேஜ். மிகவும் தேவையான ஃபேமிலி சப்ஜெக்ட் வம்சி சார்! ஷோபா அம்மா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் படத்தை பார்ப்பது அருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், என்ன மனக்கசப்பு இருந்தாலும் மகனை விட்டுக்கொடுக்க முடியுமா? மகன் மீதுள்ள அன்புதான் குறைந்து விடுமா என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement