• Jun 23 2024

பழனிக்காக பாக்கியா செய்த காரியம்.. ராதிகாவை விரட்டிய கோபி! சவாலிட்ட ஈஸ்வரி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், நைட் எல்லாம் கோபி சொன்ன விஷயங்களால் தூக்கம் வராமல் ராதிகா தவித்துக் கொண்டிருக்கின்றார்.

அடுத்த நாள் காலையில் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு கிளம்பிச் செல்ல வழியில் கோபி ஈஸ்வரியை பார்க்கின்றார். இதன்போது ஈஸ்வரி எங்க போற என்று கேட்க, ரெஸ்டாரன்ட் போறேன் அத்தை, கிரைண்டர் வேலை செய்யலன்னு கால் பண்ணினாங்க என்று சொல்லிக் கிளம்புகிறார் பாக்கியா.

அவர் போனதும் கோபி, இவ்வளவு காலையிலே வேலைக்கு போயிட்டா வீட்ல இருக்க வேலையெல்லாம் யார் பாப்பாங்க என்று கேட்க, வீட்லயும் சமைச்சு வச்சுட்டு தான் போவா. சாயங்காலம் வந்து டைமுக்கு மாத்திரை மருந்து கொடுத்து எங்களை சாப்பிட வச்சிட்டு திரும்பி போவா என்று சொல்ல கோபி மிரளுகிறார்.

அதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த கோபி ஈஸ்வரிக்கு பிரேக்பாஸ்ட் செய்து தருவதாக தோசையை ஊற்ற தோசை சரியாக வரவில்லை. அதற்கு பின்பு ஈஸ்வரி தோசையை எப்படி ஊத்தணும் என்று சொல்லிக் கொடுக்கின்றார். அங்கு ராதிகா வரவும் அவரை விரட்டி விடுகிறார் கோபி. இதனால் ராதிகா இன்னும் அப்செட் ஆகி இருக்கின்றார். இதன் போது ஈஸ்வரி இன்னும் கொஞ்ச நாள்ல என் பையனை இங்கிருந்து கூட்டிட்டு போய்விடுவேன் என்று சவால் விடுகிறார்.


இறுதியாக பழனிச்சாமி பாக்கியாவின் ரெஸ்டாரெண்ட்  பக்கத்திலேயே புதிய கடை ஒன்றை திறக்க இருக்கிறார். எனினும்  பழனிச்சாமி வீட்டுக்கு சென்ற நேரத்தில் அவரது கடையை டெக்கரேஷன் செய்து வைக்கிறார் பாக்கியா. இதனால் குடும்பத்தோடு வந்த பழனிச்சாமி அதை பார்த்து ஆச்சரியப்படுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement