• Sep 27 2023

மூச்சு விட முடியாமல் உயிருக்குப் போராடும் கயல்... புதுப்பழியைப் போட்ட ஆர்த்தியின் குடும்பம்... எழில் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

Prema / 1 month ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா.? என்ற எதிர்பார்ப்பையும் மீறி, கயல் உயிர் பிழைப்பாரா..? என்ற எதிர்பார்ப்புத்தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆர்த்தியின் அமமா "என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்திட்டீங்களேடா" எனக் கூறிப் புலம்புகின்றார். பதிலுக்கு கயலின் அம்மா "கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க எனக் கேட்கின்றார். அதற்கு அவரும் உன் பொண்ணு கயல் மாப்பிள்ளையை இழுத்துக்கிட்டு ஓடிப்போய்ற்றாள் எனக் கூறுகின்றார்.


மறுபுறம் கயலைத் தேடிச் சென்ற எழில் அங்கிருந்த ரவுடிகளை அடித்துத் தும்சம் செய்கின்றார். அதுமட்டுமல்லாது "கயல் கயிற்றில் தொங்கி துடித்த வண்ணம் இருக்கின்றார் இதனைப் பார்த்ததும் ஓடிச் சென்ற எழில் கயலை பிடித்து கைகளால் தூக்குகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement

Advertisement