• Nov 28 2022

ரோஜா சீரியல் ஹீரோயின் வீட்டில் திருமண கொண்டாட்டம்-அழகிய மணப்பெண் கோலத்துடன் வெளியான புகைப்படங்கள்..!

Listen News!
Aishu / 1 week ago
image
Listen News!

ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கு நடிகையான இவர் இந்த சீரியல் மூலமாக தமிழ்நாட்டிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ரோஜா சீரியல் தற்போது 1300 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறுஇருக்கையில்  பிரியங்கா தற்போது bridal மேக்அப் உடன் மணப்பெண் போல அழகாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

மேலும் அந்த புகைப்படம் இன்று நடந்த அவரது தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்தது தான். தங்கை திருமணத்திற்கு ப்ரியங்காவும் மணப்பெண் போல அழகாக வந்திருக்கிறார்.



பிரியங்கா நல்காரி இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் தற்போது அவரது தங்கை திருமணம் நடைபெற்று இருக்கின்றது.


அத்தோடு இரண்டு வருடங்களுக்கு முன் பிரியங்காவுக்கும் அவரது காதலருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது, ஆனால் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டதால் திருமணம் நடக்கவில்லை.