• Apr 01 2023

எங்களுக்கு வேண்டியதை நாம் தான் கேட்க வேண்டும்...கவிஞர் சினேகனின் மாஸ்ஸான பேச்சு...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

கவிஞர் சினேகன் பகாசுரன் படத்தின் ஒரு நிகழ்வின் போது அவர் யாருடன் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று ஒரு ஏக்கம் இருக்கும் அந்த ஏக்கத்தை கொண்டு வருவது அந்த படம் தான் என்று கூறியிருந்தார்.


மேலும் அவர் கூறுகையில் இங்கு உண்மையை உரக்க சொல்ல ஒரு களம் இருந்தும் சொல்வதற்கு எனோ சின்ன தயக்கம், அச்சம் இருக்கிறது. இது சுயபாதுகாப்பு என்பதால் தானோ தெரியவில்லை.  இவ்வாறான அச்சம், தயக்கம் இந்த இயக்குநரின் முதல் 2 படங்களிற்கும் இருக்கவில்லை. 


எவன் ஒருவன் இந்த சமூகத்தின் வெளியில் நின்று சமூகத்தை பற்றி பேசுகிறானோ அவன் விமர்சனங்களுக்கு உள்ளாவான். அப்படி தான் இந்த இயக்குநரின் 2 படங்களும் விமர்சனப்படுத்தப்பட்டது. சிலர் மட்டுமே சமூக பிரச்சனையை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். 


அந்த வகையில் இப்போது இந்த பகாசுரன் படத்தில் என்ன பிரச்சனை வைத்திருப்பார் என்று சிலரது ஆர்வமும் இருக்கிறது. எங்களுடைய பிரச்சனையை எங்களில் ஒருவனால் மட்டுமே அழுத்தமாக பேச முடியும். என்னை ஒரு டெக்னீஷியனாக உள்ளே அழைத்ததற்கு மோகனிற்கு நன்றி கூறுகிறேன். 


எப்பிடியாவது செல்வகுமாருடைய படத்தில் ஒரு பாட்டாவது எழுதணும் என்று ஏக்கம் இருந்தது. ஆனாலும் அவர் நடித்த படத்திற்கு நான் பாட்டு எழுதியது மகிழ்ச்சியாக இருக்கிறது. மோகன் சாரும் செல்வராகவன் சாரும் எப்படி இணைந்து படம் பண்ணினார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது என்று கூறியிருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement