சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மந்திர வாசல், சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம் உள்ளிட்ட சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் சதீஷ். அத்தோடு இவருக்கு தொடர்ந்து சீரியலில் நடிக்க வாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன.
மேலும் ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' மற்றும் 'இரு முகன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் நடிகரான சதீஷ், விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல் பாக்கியலட்சுமி சீரியலில் 'கோபி' கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலின் வில்லன் இவர் தான், அதேபோல் சில சமயம் ஹீரோவாகவும் காட்டப்படுகிறார். சினி துறையில் எத்தனையோ கதாபாத்திரம் ஏற்று நடித்த சதீஷுக்கு, பாக்கியலட்சுமி சீரியலில் வரும் 'கோபி' கதாபாத்திரமே இவரை மிகவும் பிரபலமாகியது. சின்னத்திரை ரசிகர்களின் விருப்பமான நடிகராக இருந்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சதீஷ் அன்றாடம் முக்கிய பதிவுகளையும் போட்டு வருகின்றார். அந்த வகையில் சந்திராயன் 3 என்னும் விண்கலம் நேற்றைய தினம் நிலாவில் இறங்கியதை அடுத்து தனது வாழ்த்துக்களை இந்தியாவுக்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்பொழுது நிலாவில் தண்ணீர் இருக்கா என்று தேடுகின்றோம். ராக்கெட்டை அனுப்புகின்றோம். குடிநீரை பூமியில் வியாபாரம் பண்ணுகின்றோம் என்று பதிவினைப் போட்டுள்ளார்.இந்தப் பதிவுக்கு ரசிகர்களும் சரியாகத் தான் சொன்னீங்க என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!