• Apr 28 2024

இந்தியன் 2வில் மீண்டும் உயிரோடு வருகிறார் விவேக் - அசத்தும் ஷங்கர்...ஷாக்கான ரசிகர்கள்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். சுதந்திர போராட்டத்தையும், லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தியன் மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது.

 இதனையடுத்து பல வருடங்களுக்கு பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கடந்த 2019ஆம் ஆண்டு ஷூட்டிங்கும் தொடங்கிய சூழலில் சில பிரச்னைகளின் காரணமாக ஷூட்டிங் தடைப்பட்டது. அதன் பின் மீண்டும் 2020ஆம் ஆண்டு முழுவீச்சில் ஷுட்டிங் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடங்கி பரபரப்பாக நடந்துவந்த ஷூட்டிங்கில் கிரேன் சரிந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதனால் இந்தியன் 2 படம் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டது என்றே பலராலும் கருதப்பட்டது. கமல் ஹாசனும் விக்ரம் படத்தில் நடித்து மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். இதனால் இந்தியன் 2 நிச்சயம் மீண்டும் தொடங்கப்படாது என்பது பலரின் பேச்சாக இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்தியன் 2 படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனமும் லைகாவுடன் இணைந்து தயாரிக்க முன் வந்தது.

சென்னை, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதனையடுத்து தைவான், தென் ஆப்பிரிக்காவில் ஷூட்டிங் நடந்தன. தென் ஆப்பிரிக்காவில் ரயில் விபத்து தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் புதிய தொழில்நுட்பம் ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறதாம். அதன்படி வேறு யாராவது ஒருவர் காட்சிகளில் நடிப்பார்கள். அவர் நடித்ததை விவேக் நடித்தது போல் மாற்றிவிடக்கூடிய வசதி அந்த தொழில்நுட்பத்தில் இருக்கிறதாம். இதேபோல் நெடுமுடி வேணு போர்ஷனுக்கும் இதே திட்டத்தை கையில் எடுத்திருக்கிறாராம் ஷங்கர்.

தற்போது இரண்டு பேருக்கு டப்பிங் பேசுவதற்கு மிகச்சிறந்த மிமிக்ரி கலைஞரை தேடும் படலத்தில் இருக்கிறாராம் ஷங்கர். தொழில்நுட்பம் மூலம் மீண்டும் திரையில் தோன்றவிருக்கும் விவேக்கை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement