• Sep 09 2024

தங்கலான் படத்திற்கு ரொம்பவும் கம்மியாக சம்பளம் வாங்கிய விக்ரம்! எவ்வளவு தெரியுமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கலான் திரைப்படம் காணப்படுகின்றது.

இந்த படத்தில் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இதற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

தங்கலான் திரைப்படம் வரலாற்று கதை அம்சக் கொண்ட படமாக உருவாகியுள்ளதால் இதற்காக கடுமையாக உழைத்துள்ளார் விக்ரம். இப்படத்திற்காக 20 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் மாளவிகா மோகனும் இந்த படத்திற்காக எடையை குறைத்துள்ளது மட்டுமின்றி சிலம்பம் கற்று நடித்துள்ளார். அவர் சூனியக்காரி கேரக்டரில் நடித்துள்ளார்.

உலக அளவில் சுமார் 2000த்துக்கும்  அதிகமான திரையரங்குகளில் தங்கலான் ரிலீஸாக உள்ளது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான முன் பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில் தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பள விபரம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் நடிப்பதற்காக விக்ரம் முப்பது கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளாராம்.

தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்களே ஒரு படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் நிலையில், நடிகர் விக்ரம் அவர்களை விட கம்மி சம்பளம் வாங்கி உள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement